RSS Feed  

வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு


Super bananas boosted with vitamin A
அடியக்கமங்கலம், 20.06.2014: வைட்டமின்-A சத்தை அதிகரிக்க சூப்பர் வாழைப்பழங்களை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வைட்டமின்-A குறைபாட்டை நீக்கும் பொருட்டு, வாழைப்பழத்தின் மரபணுவில் மாற்றம் செய்து, வைட்டமின்-A சத்து நிறைந்த வாழைப்பழத்தை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான உகாண்டா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வைட்டமின்-A குறைபாட்டால் மக்களுக்கு ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டை நீக்குவதற்கும், இந்த பற்றாக்குறையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறப்பதை தடுப்பதற்கும், இந்த புதிய ரக வாழைப்பழம் உருவாக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் அளவை அதிகரிப்பதற்காக வடக்கு மரபணு மாற்ற முறையில் இந்த வாழைப்பழம் உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக, ஆப்பிரிக்க மக்களுக்கு இந்த பழங்களை கொடுத்து பரிசோதிக்க உள்ளதாகவும், குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Dubai Electronics




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed