RSS Feed  

நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்


Health benefits of naval fruit
அடியக்கமங்கலம், 22.08.2014: நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி மென்மையாக. மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

மூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கினால் அவதிப்படாமல் நாவல்பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தால், நாவல்பழத்தின் விதைகளை பொடி செய்து, அவற்றை தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தால் பிரச்னை தீரும். நாவல் பழத்தை அளவாக சாப்பிட்டு வந்தால் தமனிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து மாரடைப்பு வருவதை குறைக்கும்.

London Books




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed