RSS Feed  

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்


Strawberry is a natural antibiotics
அடியக்கமங்கலம், 20.09.2014: ஆப்பிளையே மிஞ்சும் அளவுக்கு ஸ்ட்ராபெரியில் பலன்கள் நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும் மற்றும் ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.

கருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் C, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் A, டோக்கோபெரால், வைட்டமின் K போன்ற வைட்டமின்களும்,

செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

Dubai Dress And Fashion




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed