RSS Feed  

மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்


Sperm harmed by soaps and toothpaste
அடியக்கமங்கலம், 09.10.2014: ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 வகையான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் 4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர் (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான டிரைகுளோசன் ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளமில்லா சுரபிகளை பாதிப்பவை என்று கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கருதப்படும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

American Vehicles And Parts




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed