RSS Feed  

ஆரோக்கியம் தரும் புடலங்காய்


Health benefits of long gourd
அடியக்கமங்கலம், 09.04.2015: புடலங்காய் தமிழகத்தில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள்: உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ஆகியவை. இது சற்று நீரோட்டமுள்ள காய் என்பதால், இது சூட்டு உடம்புக்கும் ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். எளிதில் சீரணமாகி, நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் திரிதோசத்தைப் போக்கும்.

வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய வலிமையைக் கொடுக்கவல்லது. புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்பாடுகள் சிலவற்றை பார்க்கலாம். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக புடலங்காய் இருக்கிறது. காமத்தன்மையை பெருக்கும் வல்லமையும், புடலங்காய்க்கு உண்டு. தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தேகம் பருமன் அடையும். புடலங்காய் அஜீரண தொல்லையை போக்குவதோடு, உணவை எளிதில் சீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு, புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலையும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும். இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால், உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களையும் போக்கும்.

Coimbatore Collectibles




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed