RSS Feed  

அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை


Long breast feeding to kids becoming rich in society
அடியக்கமங்கலம், 23.04.2015: தாய்ப்பால் பருகும் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நமக்குத் தெரியும், ஆனால் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகத் திகழும் என்பது தெரியுமா? பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு இப்படித்தான் தெரிவிக்கிறது. அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும், பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் விளங்குவதாக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டு காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் ஐ.கியூ., அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்தி சாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.கியூ., சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர். 1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. எனவே, தமது ஆய்வும் அதன் முடிவுகளும் முந்தைய ஆய்வு களைவிட மேம்பட்டவை என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக சுமார் 3 ஆயிரத்து 500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு அலசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Manila Sports Goods




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed