RSS Feed  

நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்


Medicinal uses of jackfruit
அடியக்கமங்கலம், 25.06.2015: முக்கனிகளில் இரண்டாவது பழமான பலா ருசி மிக்கக் கனிகளை தருவதுடன் ஆடுகளைக் கொழுக்க வைக்கும் தழை. இசைக் கருவிகளுக்கான மரம், கறியாகச் சமைத்திடப் பிஞ்சு மற்றும் விதை, மருத்துவப் பயனுடைய பல்வேறு பகுதிகள் ஆகிய அனைத்தையும் உடையது.பணம் காய்க்கும் மரமான இந்த பலா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உற்றதுணையாக இருக்கிறது. கோடைகாலங்களில் மட்டும் கிடைக்கும் இந்த சீசன் பழத்தை எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு பதப்படுத்தி சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அவ்வளவாக நம்மிடம் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் பலாவை பதப்படுத்தி எல்லா நாட்களிலும் அதை உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.

பலா மரத்திலிருந்து கிடைக்கும் பிஞ்சு, இளங்காய், பாதி முற்றிய காய், முற்றாத காய், நன்கு முற்றிய காய், பலாப்பழம், பலா கொட்டை, பலா சக்கை, பலாச்சுளை ஆகியவற்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.அதே போல் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 30ற்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட பலா உணவுகள் பைகளில், பாட்டில்களில் அடைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் பலா சீசனுக்கான காலம் வரை காத்திருந்து பலாச்சுளை மட்டும் சுவைத்துவிட்டு அப்படியே அதை மறந்துவிடுகிறோம்.பலாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள்பலா பிஞ்சு, இளங்காய் ஆகியவற்றை காய்கறியாக சமையலுக்கு பயன்டுத்தலாம். பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து உடனடியாக சமைக்கும் அளவில் சந்தை படுத்தலாம்.

பாதி முற்றிய முற்றாத காய்களிலிருந்து கட்லெட், சிப்ஸ், பிரியாணி, குருமாஅவியல் தயாரிக்கலாம். நன்கு முற்றிய காயிலிருந்து மஞ்சூரியன், உலர்ந்த பலாச்சுளை, அடை, பப்படம், ஆப்பம், தோசை, இட்லி, பலாச்சுளை பவுடர், ஊறுகாய் தயாரிக்கலாம். பழுத்த பலாச்சுளையிலிருந்து அல்வா, வரட்டி, ஜூஸ், ஐஸ்கிரீம், கலவைப்பழ ஜூஸ், ஜாம், மில்க்ஷேக், மிட்டாய் வகைகள், பாயசம், பேக்கரி வகைகள், பலாப்பழ புட்டு கொழுகட்டை, தேனில் ஊறிய பலாச்சுளை ஆகியவற்றை தயாரிக்கலாம். சக்கை, சுலையிலிருந்து பலாகூழ் எடுத்து ஜாம், குல்பி ஆகிய இனிப்புகள் செய்யலாம்.

பலாச்சுளையிலிருந்து ஒயின் தயாரிக்கலாம். பலா கொட்டைகளை பதப்படுத்தி காய்கறிக்கு மாற்றாகவும், பயன்படுத்தலாம். பலா கொட்டை மாவு தயாரித்து பகோடா, முறுக்கு, மிட்டாய், வடை, அல்வா, மைதா மற்றும் கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, ரொட்டி, பேக்கரி தயாரிப்புகள் செய்யலாம். உப்புமா செய்யவும், அவியல், பொறியலாகவும் பயன்படுத்தலாம்.

சத்துள்ள உணவு பலா உடல் சூட்டை உருவாக்கும் உணவு என்று தான் நாம் இதுவரை நினைத்திருக்கிறோம் ஆனால் பலா பல்வேறு நோய் தீர்க்கும் உணவு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உணவுகளில் 10 சதவீதத்திற்கு மேல் மாவுச்சத்து, 2 சதவீதத்திற்கு புரதச்சத்து, சிறிதளவு கொழுப்பு மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாஷ் இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் நார் சத்துகள், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற உடல் நலன் காக்கும் பல்வேறு உணவு சத்துகளை உள்ளடக்கி உள்ளது. நீரிழிவு நோயாளிக்கு பலா பிஞ்சு, முற்றாத காய்கறியிலிருந்து அவியல். பொறியல், குருமா என பல்வேறு பண்டங்கள் செய்து உண்ணலாம். ரத்த அழுத்த நோயாளிக்கு பலாவிலுள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைப்பதாக பாதுகாப்பளிப்பதாக உள்ளதால் பழுக்காத பலாக்காய் மற்றும் பலாகொட்டை உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும். அதேபோல் பலாமர வேரினை நீரில் கொதிக்கவைத்து கிடைக்கும் நீரினை வடித்து குடித்தால் ஆஸ்துமா நோய் தீரும். பலாவிலுள்ள தாவர உயிர்ச்சத்துகள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும், அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுத்து என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.

வாழ்நாளை அதிகப்படுத்தும் உணவு பலாவிலிருந்து கூட்டு, பொறியல், அவியல் சுளை ஆகியவற்றை உண்ணும் பழக்கமுள்ளவர்கள் சராசரி ஆயுளைவிட அதிக ஆயுளுடன் ஆரோக்கியமான உடல்வாகு கொண்டவர்களாக உள்ளனர். பலாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஜாக்குலின் எனப்படும் பொருள் புற்றுநோய் தீவிரத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலாச்சுளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாசுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது. பலாவிலிருந்து தயாரித்த உணவுகளை அல்லது பலாச்சுளையினை ஒரு கிலோ சாப்பிட்டால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பழுத்த பலாச்சுளை மலச்சிக்கலை குணப்படுத்தும் என்பதால் பழக்கமில்லாமல் அதிகம் சாப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

USA Boats
Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed