RSS Feed  

புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா


Mint leaf fight against cancer tumors
அடியக்கமங்கலம், 14.09.2015: புதினாவில் உயிர்ச்சத்துக்கள் A, B, C, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும். புதினா பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. பத்து புதினா இலைகளைக் கழுவித் தின்றாலோ அல்லது இலைகளை கொதிக்க வைத்து, ஆறிய நீரை அருந்தினாலோ அஜீரணம், வயிற்று பொருமல், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நோய்கள் அகலும். வயிற்றுப் பசி உண்டாகும். இதன் தண்டுகளும், இலைகளும் கொதிக்க வைத்த நீரில் தேன், எலுமிச்சைச் சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்துவர, வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள், வயிற்றுவலி, காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும்.

புதினாத் துவையல் வாந்தி, குமட்டலை தீர்க்கும். புதினாவுடன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்த தேநீர் குடித்தால் நன்கு ஜீரணமாகும். புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

Singapore Furnitures




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed