மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்

04.02.2012

Information about the heart
உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும். இது தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது. இந்த நான்கு அறைகள் இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. இதில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து (Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.

இரு சில காரணங்களால் இருதய இரத்தநாளங்கள் தடித்து விட்டால் அவை குறுகி விரியும் தன்மையையும் மிகவும் பாதிக்கும். கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி அல்லது திடீரென்று இரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது.

நாளங்களில் 50 சதவீதத்திற்கு மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம். உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைப்பது, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டுவது, ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.

இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ, அஞ்சியோப்லாச்ட்டியோ (angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்யலாம்.

Indian Crafts Classifieds


Free qatarassets.com adsense Free sgclassify.com adsense Free chennaiclassify.com adsense
Free malaysiaadz.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiadz.com adsense
Free mytiruvarur.com adsense Free betamil.com adsense Free dubaiassets.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free classifiedsense.com adsense