RSS Feed  

சனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு


New baby moon spotted in Saturn
அடியக்கமங்கலம், 17.04.2014: சனி கிரகத்தில் இருந்து புதிய துணை கிரகம் உருவானது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டுள்ளது. சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நாசா மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ஐஸ் கட்டி போன்று இருக்கிறது. இது 1200 கி.மீ நீளமும், 10 கி.மீ அகலத்துடனும் காணப்படுகிறது. இந்த துணை கிரகத்துக்கு பொக்கி என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

USA Furnitures




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed