RSS Feed  

கெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு


Kepler-10C giant earth-like planet
அடியக்கமங்கலம், 05.06.2014: பூமியை போன்ற ராட்சத கோள்கள் பிரபஞ்சத்தில் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கிரகங்கள் நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை கொண்டிருந்தாலும் பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கிரகம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய ரக கோள்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர்-10C (KEPLER-10C) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ அல்லது நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர்-10C (KEPLER-10C) அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால் இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.

Singapore Movies




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed