RSS Feed  

விண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்


NASA plans giant space telescope
அடியக்கமங்கலம், 25.06.2014: 176 அடி நீளமுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியை விண்வெளியில் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில் 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள ஹப்பில் தொலைநோக்கியை விட நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால் விண்வெளியில் கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கிரகங்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும் வேற்று கிரகங்களில், ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு பெரிய தொலைநோக்கியை பூமியில் தயாரித்து பின்னர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ம் ஆண்டுக்குள் தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bangalore Finance




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed