RSS Feed  

வியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்


Giant eye spot on jupiter due to huge storm
அடியக்கமங்கலம், 31.10.2014: சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகின்ற வியாழன் கிரகத்தில் ராட்சத கண்ணை போல் தோற்றம் ஏற்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாசா வியாழன் கிரகத்தில் வீசி வரும் புயலை ஹப்பிள் (HUBBLE) தொலைநோக்கியின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வியாழன் கிரத்தை சுற்றி வரும் நிலவான கானிமேட்டை (GANYMEDE) புயல் கடந்து சென்றபோது, ராட்சத கண்ணை போல தோற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசா ஆய்வாளர்கள் கூறுகையில் வியாழன் கிரகத்தில் கடந்த 400 அல்லது 500 ஆண்டுகளாக இப்புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் வியாழனின் நான்கு பெரிய நிலவுகளில் ஒன்றான கானிமேட் கடந்ததை, ஹப்பிள் தொலைநோக்கியின் 3வது கமெரா படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Malaysian Sports Goods




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed