RSS Feed  

பூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு


Eight new earth like far-off planets found
அடியக்கமங்கலம், 08.01.2015: ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் அறிக்கையை சமர்பித்தனர் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.இதில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. இதில் 1000 கிரகங்கள் சமீபத்தில் உறுதிபடுத்த்ப்பட்டு உள்ளது. அந்த அறிக்கியில் பூமியை போன்று பாறைகள், கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியுடையது என நம்பப்டும் 8 கிரகங்களை நாச விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்த கிரகங்கள் நாசாவின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கி கருவையை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கிரகங்கள் பூமியைவிட இரண்டு மடங்கு குறைவான அளவுள்ளவை , அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றாவது மனிதர்கள் வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் உயிரினங்கள் வாழ நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறுகின்றனர். இந்த கிரகங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

Abu Dhabi Household




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed