RSS Feed  

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்


Scientists bewildered mysterious mist on Mars
அடியக்கமங்கலம், 18.02.2015: செவ்வாய் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது இவை விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரமாண்டமான மூடுபனி நிலை 2012ஆம் ஆண்டு தன்னார்வ விண்ணியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இந்த மூடுபனி நிலை இரு முறை தோன்றி மறைந்துள்ளது. அதுகுறித்த புகைப்படங்களை ஆராய்ந்திருக்கும் விஞ்ஞானிகள் இந்த மூட்டம் சுமார் 1,000 கிலோமீற்றர் வரை தோன்றி இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த மூட்டம் மிகப் பெரிய மேகமாக அல்லது துருவ ஒளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விபரம் ஜெர்னல் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த இரு கோட்பாடுகளில் எது சரியாக இருந்தாலும் செவ்வாயின் மேல் வளிமண்டலம் குறித்து இதுவரை நம்பி வந்த புரிதல்கள் தவறாகிவிடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய மேல்பகுதி வளிமண்டலத்தில் இந்த மூட்டம் எவ்வாறு தோன்றியது என்பதை விஞ்ஞானிகளால் விளக்க முடியாதுள்ளது. இதனால் பதில்களை விடவும் கேள்விகளே எழுகின்றன என்று ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் விண்கலங்கள் மற்றும் தொலைநோக்கிகளைக் கொண்டு இந்த மர்மத்தை விடுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Bangalore Jobs




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed