RSS Feed  

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்


Mars once had an ocean
அடியக்கமங்கலம், 09.03.2015: செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

அங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு விதமான நீர் முலக்குருக்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. பூமியில் இருப்பது போல இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிய H2O மூலக்கூறும் ஒரு ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் என்ற அணுவை கொண்ட HDO என்ற மற்றொரு மூலக்கூறும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

USA Vehicles And Parts




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed