RSS Feed  

செவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்


Blue sunset on Mars
அடியக்கமங்கலம், 12.05.2015: சூரிய அஸ்தமனத்தின் போது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மாற்றத்தை மிக பிரமாதமாக படமெடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம். அதாவது சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனுக்கு அருகில் உள்ள ஆகாயம் நீலநிறமாக இருக்கும் காட்சியையே படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தன்னிடமுள்ள மாஸ்ட் கமெராவை பயன்படுத்து சூரிய அஸ்தமனத்தை படமெடுத்தது.

இதுகுறித்து செவ்வாயில் சூரிய அஸ்தமனம் குறித்து ஆய்வு செய்து வரும் டெக்ஸாஸ் A & M பல்கலைகழத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், செவ்வாய் கிரகத்தின் வான்வெளியில் உள்ள தூசிகள் சரியான அளவில் இருப்பதால் அவற்றினூடே நீல ஒளி ஊடுருவிச் சென்று ஆகாயத்தை வண்ணமயமாக மாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.






Coimbatore Household




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed