RSS Feed  

விண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி


NASA tried to remove space debris
அடியக்கமங்கலம், 08.07.2015: பூமியின் சுற்று வட்டப்பாதையை சுமார் 5 லட்சம் பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மணிக்கு சுமார் 28,200 கி.மீட்டர் வேகத்தில் அவை சுற்றிக் கொண்டிருப்பதால் பிற செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் பூமிக்கும் சேதம் ஏற்படும். எனவே, இந்த பொருட்களை சேகரித்து பூமிக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியில் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வரும் பொருட்களை தனியாக பிரித்து பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

சுவிஸ் பெடரல் லஸ்சானே தொழில்நுட்ப நிறுவனம் என்ற ஆய்வுக் கூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும், ஹெபியா ஜெனீவாவை சேர்ந்த நுண்ணிய பொறியியல் துறை மாணவர்களும் சேர்ந்து ‘பேக்மேன் நைட்’ என்ற செயற்கோள் கருவியை உருவாக்கி வருகின்றனர். இக்கருவி விண்ணில் செலுத்தப்பட்டவுடன் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வரும் செயலிழந்த சிறிய ரக செயற்கை கோள்கள் மற்றும் உடைந்து தனியாக சுற்றி வரும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை கவர்ந்து இழுத்து பூமிக்கு கொண்டு வர உதவும்.

Manila Events




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed