RSS Feed  

வானில் இரத்த நிலா


Blood Moon Sparks On Sky
அடியக்கமங்கலம், 10.09.2015: SUPER MOON நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது. இதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது. காரணம், அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.

பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால், ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். அதனால் தான் அன்று தோன்றுவது இரத்த நிலா (BLOOD MOON) என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சூரிய கிரகணத்தைக் காணும்போது அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. செப்டம்பர் 27 ஆம் திகதி தென்படவுள்ள இந்நிகழ்வை வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும். இனி அடுத்த Super Moon சந்திர கிரகணம், 2033 இல் தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Mumbai Electronics




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed