RSS Feed  

மனித உடலின் விவரங்களை தெரிந்து கொள்ள மைக்ரோ சிப்


Microchip implants to human
அடியக்கமங்கலம், 13.02.2014: இம்ப்ளான்ட் RFID அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள், பூனைகள், விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா விவரங்களும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. சில திருடர்கள் வீட்டில் தங்கம் வைரம் திருடுவதை விட விலை உயர்ந்த மீன்கள் தான் அவர்கள் டார்கெட். அப்படி திருடினால் கூட அவர்களால் விற்க முடியாது ஏன் என்றால் உள்ளே இருக்கும் மைக்ரோசிப் அந்த மீனின் மொத்த ஜாதகத்தையும் காட்டி கொடுத்துவிடும்.

கடந்த சில ஆண்டுகளாய் ஆய்வில் இருந்த RFID எனப்படும் மனித உடலில் இம்ப்ளான்ட் செய்யப்படும் ஹியூமன் சிப் சென்ற வாரம் 50 டாலருக்கு நிறைய பேருக்கு பொருத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் நம் உடம்பின் அத்தனை மருத்துவ விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு விபத்தில் மாட்டி கொண்டு சுய நினைவு இல்லை என்றாலும் அந்த நேரத்தை வீணாக்காமல் இந்த சிப்பின் மூலம் ரத்த வகை, என்ன அலர்ஜி, கடைசியில் எங்கு வைத்தியம் செய்யப்பட்டது, நெருங்கிய உறவினர் பெயர், போன் நம்பர் எல்லாம் இருக்கும் இதன் மூலம் கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவர்கள் உங்களுக்கு வைத்தியம் செய்ய முடியும். அது மட்டுமல்ல வண்டியை ஸ்டார்ட் செய்ய சாவி வேண்டாம், வீட்டை திறக்க கூட இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். இது இருந்தால் உங்கள் பர்ஸ் கூட தேவை இல்லை.

Indian Computers




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed