RSS Feed  

உலகம் எதிர்பார்த்த கூகிள் கண்ணாடி வெளிவந்துவிட்டது


Google glass released in USA
அடியக்கமங்கலம், 16.04.2014: தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகிள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அது மட்டுமின்றி உலகின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.

கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி உலகத்தை கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகிள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்க வாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.

Kolkata Electronics




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed