RSS Feed  

முட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்


Bright new future for incandescent light bulbs
அடியக்கமங்கலம், 16.01.2016: பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான பல்புகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விரயமாகும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

தமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Bangalore Music




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed