AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்

23.11.2011

ஐரோப்பிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து கடன்சுமை அதிகரிப்பதாலும் பொருளாதார வளர்ச்சி குறைவதாலும் அதன் AAA தகுதியை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. பொது நிதிப் பற்றாக்குறையும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் பிரான்ஸ் நாட்டின் AAA தகுதியைக் காப்பாற்ற இயலாமல் தடுக்கின்றன. இன்னும் மூன்று மாதத்தில் இந்த நிலை ஏற்படும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னடைவை சந்தித்து வரும் பிரான்சின் பத்திரச் சந்தையும், பிரான்ஸ் அரசின் கடன் நெருக்கடியும் யூரோ மண்டலம் முழுக்கப் பரவி வருகின்ற கடன் தொல்லையும் AAA தகுதிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரக் கணக்குப்படி ஜேர்மனி தன் நீண்டகாலக் கடனுக்குக் கட்டும் தொகையைப் போல பிரான்ஸ் இரண்டு மடங்கு தொகை கட்டுவதால் 100 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கும் போது ஒரு ஆண்டுக்கு மூன்று பில்லியன் யூரோ அதிகரிக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. பல தொழில் முதலீட்டாளர்கள் பிரான்சின் AAA தரம் குறைந்து வருவதை ஊகித்ததால் அடுத்த ஆண்டில் ஐரோப்பிய மண்டலத்தில் பொருளாதார நெருக்கடி தோன்றும் என்று கருதுகின்றனர்.

Indian Baby Classifieds


Free chennaiclassify.com adsense Free dubaiadz.com adsense Free mytiruvarur.com adsense
Free abudhabiadz.com adsense Free sgclassify.com adsense Free classifiedsense.com adsense
Free betamil.com adsense Free malaysiaadz.com adsense Free indiaassets.com adsense
Free qatarassets.com adsense Free abudhabiassets.com adsense Free dubaiassets.com adsense