RSS Feed  

புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை


US scientists found solution to kill cancer cells
அடியக்கமங்கலம், 08.01.2014: புற்று நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய கருத்து இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பயம் மற்றும் பீதியால் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர். பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில் ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித நானோ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் ஆச்சரியப்படும் வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Dubai Entertainment




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed