RSS Feed  

பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்


Oldest vintage snake venom still active
அடியக்கமங்கலம், 30.01.2014: பாம்பின் விஷம் 80 ஆண்டுகளுக்கு பிறகும் கெடாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் பையட்டா மற்றும் ரத்த அழுத்தத்துக்கு கொடுக்கப்படும் கேப்டோபிரில் ஆகிய மருந்துகளில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், 52 விஷ மாதிரிகளை ஆய்வு செய்த போது 80 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷத்திலும், உயிரியியல் ரீதியான செயல்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முறையாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷத்தை அறிவியல் ரீதியாக பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், விஷம் மற்றும் நச்சு ஆகியவை மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பாம்பு இனத்தின் விஷமும் வெவ்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. எனவே ஒவ்வொரு விஷ மாதிரியும் மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Malaysian Travel And Tour




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed