RSS Feed  

ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்


New progress found in stemcel research
அடியக்கமங்கலம், 31.01.2014: மனித உடம்பில் பல வகையான செல் தொகுப்புகள் உள்ளன. இவைகளில் நரம்பு, இதயம், கல்லீரல் என ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகள் உண்டு. இதில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால், ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதன் மூலம் பழுதடைந்த பகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த செயல்பாடு பரவலாக கண், இதயம், மூளை சிகிச்சை முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், எலிகளின் ரத்த அணுக்களை அமிலத்தில் நனைத்தபோது அவை ஸ்டெம்செல்களாக உருமாறுவதைக் கண்டுபிடித்துள்ளனர். ஸ்பாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்களின் உற்பத்தி குறித்து ரிகேன் மையத்தில் உள்ள உயிரியல் வளர்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதே முறையில் தற்போது மனித ரத்தத்தில் ஸ்டெம்செல்களை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வெற்றி பெறுமேயானால் குறைந்த செலவில் விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Dubai Travel And Tour




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed