RSS Feed  

கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை


First public buses appear in Cambodia after 10 years
அடியக்கமங்கலம், 06.02.2014: கம்போடியத் தலைநகர் நாம்பென்னில் முதல் முறையாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். நாம்பென் நகரில் 2001ம் ஆண்டில்தான் கடைசியாக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன, ஆனால் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதால் துவங்கிய ஒரு மாதத்துக்குள் நிறுத்தப்பட்டன.

பொதுவாக நாம்பென்னில் மக்கள் மோட்டார் பைக்குகளையே விரும்புகிறார்கள். 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாம்பென் நகரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. மேலும் சுமார் 30,000 கார்களும் சேர்ந்து கொண்டு நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தப்படுகின்றன. இப்போது போக்குவரத்து அதிகாரிகள் நகரில் இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மீண்டும் புதிய ஒரு பொதுமக்கள் போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஒரு மாதகாலத்திற்கு பரிசோதனையாக நடக்கும் இந்தச் சேவையில் நகர மையத்திலிருந்து ஒரே ஒரு தடத்தில் பத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Delhi Party And Club




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed