RSS Feed  

பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை


Toothpaste chemicals may be eroding child
அடியக்கமங்கலம், 18.02.2014: பற்பசை உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர்கள் மற்றும் கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியின் ஆய்வாளர்களும் இணைந்து அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது. டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன.

கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன. இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட மேலும் 6 ரசாயன பொருட்கள் சேர்ந்துள்ளன. இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாகவும், டிரை கிளீனிங் போன்றவற்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை சிதைத்து விடுகின்றன. அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மார்க்கெட்டில் புதிய பொருட்கள் அறிமுகமாகும் போது அதில் உள்ள ரசாயனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Malaysian Baby Items




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed