RSS Feed  

பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்


Climate change causes spread malaria higher
அடியக்கமங்கலம், 09.03.2014: பூமியின் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் மலேரியா நோய்ப் பரவல் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆப்பிரிக்காவின் மலைப் பிராந்தியங்களிலும் தென்னமெரிக்காவிலும் மலேரியா பரவும் அபாயம் எழுந்துள்ளது என்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில், சிறிய அளவில் புவியின் வெப்ப அளவு அதிகரித்தாலே, கூடுதலாக பல லட்சம் பேருக்கு மலேரியா நோய் வரக்கூடிய அபாயம் ஏற்படும் எனறு சயின்ஸ் என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மலேரியா கிருமிகளுக்கு காரணமான கொசுக்கள் உயரமான பகுதிகளுக்கு தமது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களுக்கு மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உடலில் இருக்காது என்பதால், அவர்களிடையே மலேரியா வேகமாகப் பரவிவிடும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 22 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hyderabad Travel And Tour




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed