RSS Feed  

மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்


Scientists discovered the way to switch off brain activity
அடியக்கமங்கலம், 29.04.2014: ஒளி உணர்வுகள் மூலம் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் புதிய தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானியான கார்ல் டீசெரோத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு ஆப்டோஜெனிடிக்ஸ் என்ற தனது தொழில்நுட்பத்தின் மூலம் ஒளி உணர்வுகளை கொண்டு மூளை செல்களின் செயல்பாடுகளை நிறுத்துவது எப்படி என கண்டுபிடித்தார். இதை அடிப்படையாக கொண்டு உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் மூளை செல்கள், இதயத்தின் செல்கள் மற்றும் ஸ்டெம் செல்கள் குறித்து ஆய்வு செய்து வந்தனர். எனினும் ஒளி உணர் புரதங்களை கொண்டு செல்களை ஆன் செய்வதில் வெற்றிபெற முடிந்ததே தவிர செல்களை ஆப் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

தற்போது டீசெரோத்தின் குழு ஒளி உணர் புரதங்களை கொண்டு மூளையின் செல்களை அணைக்கும் வகையில் முன்னேற்றம் தரும் புதிய தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மூளை சுற்றுகள் எப்படி நடக்கின்றன, சிந்திக்கின்றன மற்றும் எப்படி உணர்ச்சிவயப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் மூளை சம்பந்தமான சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.

Singapore Baby Items




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed