RSS Feed  

எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்


Throat cancer can detect by saliva
அடியக்கமங்கலம், 21.05.2014: ஒரு மனிதனின் எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் அவனுக்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் மற்றும் பிற தொண்டை சம்பந்தமான நோய்களைக் கண்டறிய முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மனிதனுடன் ஒப்பிடும்போது தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்கள் உட்பட பிற புற்று நோயாளிகளும் மற்ற வகையான தொண்டை நோய்களைக் கொண்டவர்களின் எச்சிலிலும் பாக்டீரியாக்களின் தன்மை வேறுபட்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொண்டைப் புற்றுநோய் ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளிகளில் 21.5 சதவிகிதம் பேர் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு நோய் முற்றும் வரை இதற்கான அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை என்று சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் 68 ஆண்கள் மற்றும் 63 பெண்கள் உட்பட 113 நோயாளிகளிடம் தொண்டை நோய்த் தாக்கம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது சோதிக்கப்பட்டவர்களில் 14 பேர் தொண்டைப் புற்றுநோயாலும், 13 பேர் பிற தொண்டை நோய்களாலும், 22 பேர் வேறுவிதமான கேன்சர் நோய்த் தாக்கங்களினாலும், 10 பேர் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தொண்டை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சிலில் லெப்டோடிரிக்கியா, கேம்பிலோபெக்டர் என்ற இரண்டு பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. மேலும் சில வகை பாக்டீரியாக்களின் அளவு குறைந்திருந்ததும் இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் நோய்த்தாக்கத்தினைப் பற்றி முன்னரே அறிந்துகொண்டு சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Abu Dhabi Movies




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed