RSS Feed  

மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை


Memories can continue for three minutes after death
அடியக்கமங்கலம், 10.10.2014: மனிதனின் மரணத்தின் போது மூளையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு மூன்று நிமிடங்கள் நினைவுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

USA Training




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed