RSS Feed  

பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்


Bill Gates needs 218 years to spend all his money
அடியக்கமங்கலம், 03.11.2014: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸின் சொத்துக்களை செலவு செய்து தீர்க்க 218 வருடங்கள் ஆகும் என்று ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு செல்வந்தர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. கார்லோஸ் ஸ்லிம் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220 ஆண்டுகளில் செலவிட முடியும். மேலும் இந்த ஆய்வில் பொருளாதார மந்தநிலையின் போது உலக பில்லியனர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

London Specialty Services




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed