RSS Feed  

உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்


First aircraft powered by green diesel
அடியக்கமங்கலம், 09.12.2014: உலகின் முதல் கிரீன் டீசல் விமானம் வானில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளது. வீணாக போகும் சமையல் எண்ணெய் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து கிரீன் டீசல் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது என கருதப்படும் இந்த டீசலை, கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தரைவழி போக்குவரத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

போயிங் விமான நிறுவனம் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஜெட் பியூயல் பெட்ரோலியத்துடன் கிரீன் டீசலையும் கலந்து கடந்த 2ம் திகதி போயிங் 787 என்ற விமானத்தில் சோதனை செய்தது. இந்த டீசலில் விமானம் நன்கு வேலை செய்வதுடன், மற்ற எரிபொருளை விட 50 முதல் 90 சதவிகிதம் மட்டுமே குறைவாக கார்பனை வெளியிடுகிறது. அமெரிக்க விமானத்துறை ரோல்ஸ் ராய்ஸ் உதவியுடன், இச்சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kolkata Travel And Tour




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed