RSS Feed  

நீர் ஒளி வாயு இல்லாமல் வாழும் நுண்ணுயிர்கள்


Living microbes without water air and light
அடியக்கமங்கலம், 30.12.2014: பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்துள்ளனர். கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்த்தாம். இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன எனப்தைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.

இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர். இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.

Kolkata Decoration




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed