RSS Feed  

அண்டார்டிகாவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நீல நிற பனிப்பாறை


Surprised Blue Iceberg In Antarctica
அடியக்கமங்கலம், 18.01.2015: உலகில் வேறெங்கும் காண முடியாத விசித்திரமான, மர்மமான பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த அலெக்ஸ் கார்னல் (ALEX CORNELL) என்பவர் இயற்கை காட்சிகளை படம் பிடிப்பதை தொழிலாக கொண்டவர். இவர் சமீபத்தில் அண்டார்டிகா பிரதேசத்திற்கு பனிக்கட்டிகளையும், பனிப்பாறைகளையும் படம் பிடிக்க சென்றுள்ளார். அங்கே பரந்து விரிந்த பனிபிரதேசத்திற்கு நடுவில் செங்குத்தாக மிகப்பெரிய பனிப்பாறை ஒன்றை கண்டுபிடித்தார். வழக்கமாக காணப்படும் பனிப்பாறை போல் இல்லாமல், விசித்திரமாகவும் மர்மமாகவும் காணப்பட்டதாக கார்னல் குறிப்பிட்டுள்ளார்.

பனி பிரதேசங்களில் காணப்படும் பனிப்பாறைகளில் 90 சதவிகிதம் பனிப்பரப்பிற்கு கீழ் தான் இருக்கும். ஆனால் அந்த விசித்திரமான பனிப்பாறையின் பெரும்பாலான பகுதி பனிப்பரப்பிற்கு மேலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் போது, அந்த விசித்திரமான பனிப்பாறை மட்டும் நீல நிறத்தில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்ததாக கூறியுள்ளார்.

பனிப்பாறைகள் அவ்வப்போது உடையும் தன்மை கொண்டதால், ஆங்காங்கே சிறு சிறு பனிக்கட்டிகள் சிதறி கிடக்கும். ஆனால் அந்த மர்மமான பனிப்பாறையானது நேர்த்தியாக செதுக்கியது போல், எந்த உடைந்த பாகங்கள் இல்லாமல் பளப்பளப்பாக இருந்தது தன்னை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸ் கார்னலின் புகைப்படங்களை ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் இந்த பனிப்பாறை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இப்பனிப்பாறையை பற்றி விரிவாக ஆராய அறிவியல் வல்லுனர்கள் முயன்று வருகின்றனர்.

Coimbatore Jobs




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed