RSS Feed  

உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை


Lips are not sweatless part
அடியக்கமங்கலம், 20.02.2015: மனித உடலில் வியர்க்காத பகுதி எதுவென்று கேட்டால் எல்லோரும் சொல்லி வைத்தார்போல் உதடு என்பார்கள். சினிமா பாடல்கள் கூட இதைத்தான் சொல்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இது உண்மையில்லை என்கிறார்கள். உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்க்கும். வியர்வைச்சுரப்பிகள் உடல் முழுவதும் உண்டு. நமது உடலில் வெப்பம் அதிகமானால் அதைக்கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக்கொள்ள ஏற்பட்டது தான் வியர்வை. உடலில் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதனின் வெப்பம் தாறுமாறாக கட்டுப்பாடே இல்லாமல் அதிகப்பட்டு போயிருக்கும்.

வியர்வை பெரும்பாலும் தண்ணீர் தான். அதனுடன் சேர்ந்து சில ரசாயனங்களையும், கழிவுப்பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை சருமத்தில் இருக்கும் 20-ல் இருந்து 50 லட்சம் நுண்ணிய துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. உள்ளங்கையிலும், உள்பாதங்களிலும் இந்த துவாரங்கள் அடர்த்தி கொஞ்சம் அதிகம். ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வைச்சுரப்பி இருக்கிறது. இதைத்தவிர அமாக்ரின், செபாஷியஸ் சுரப்பிகளும் உள்ளன. அமாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், பிறப்புறுப்பு பகுதிகளிலும், பெண்ணின் மார்பகக் காம்பிலும் உள்ளன. இவை ஒருவித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். இந்த திரவம் கொஞ்சம் கலங்கலாக இருக்கும். காய்ந்ததும் கோந்துபோல் ஆகிவிடும்.

செபாஷியஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடங்களிலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வைச்சுரப்பிகள் சிபம் எனும் எண்ணைத் திரவத்தை சுரக்கிறது. இதற்கு ‘வாட்டர் புரூப்’ போன்று தண்ணீரைத் தடுக்கும் சக்தி உண்டு. இதுதான் தலையில் ஏற்படும் காயத்தை ‘செப்டிக்’ ஆகாமல் பார்த்துக்கொள்கிறது. வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை. உதட்டில் வியர்வை சுரப்பிகள் மிக மிகக்குறைவு, அதனால் அங்கு வியர்ப்பது தெரிவதில்லை. அதனால் பெண்கள் உதட்டு சாயம் பயன்படுத்துவது ஆபத்து, அதிலும் டாக்சிக் மெட்டல் (TOXIC METALS) அதிகம் கலந்த அடர்த்தியான மிகவும் பளபளப்பான உதட்டு சாயங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் விறைவில் புற்று நோயை வரவழைக்கும் பேராபத்தும் உண்டு என்று கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் 2013ம் ஆண்டு கண்டுபிடித்துள்ளனர்.

London Dress And Fashion




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed