RSS Feed  

காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது


Air Pollution In India Reducing Lifespan
அடியக்கமங்கலம், 21.02.2015: இந்தியப் பொருளாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் எரிசக்தித் துறை நிபுணர்களும் இணைந்து காற்று மாசடைவதைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்தியா தனது எரிசக்தித் தேவைக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களை அதிகம் சார்ந்து இருப்பதால் நகரங்களில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் காற்று மாசு அதிக அளவு காணப்படுவதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஆனால் இந்திய அரசு உள்நாட்டில் எடுக்கப்படும் நிலக்கரியின் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகராக புதுடில்லி இருக்கிறது மேலும் பல நகரங்களில் காற்றின் அளவு மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகம் பேருக்கு ஏற்படுகின்றன. இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக் மூன்றாண்டுகள் வரை குறையும் என எச்சரித்துள்ளனர்.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வரி விதிப்பது. காற்றில் மாசு எவ்வளவு உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற விடங்களைச் செய்வதன் மூலம் இந்த நிலமையை மாற்ற முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Kolkata Shoes




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed