RSS Feed  

இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது


80 percent surface water polluted in india
அடியக்கமங்கலம், 28.06.2015: இந்தியாவில் உள்ள மொத்த மேற்பரப்பு நீரில் 80 சதவீதம் மாசுபட்டது என சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர் மாசுபாடு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் வாட்டர் எய்ட் என்ற சர்வதேச அமைப்பு, இந்திய அரசின் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 2013-ல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் 75 முதல் 80 நீர் மாசுபட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கலப்பதுதான் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியேற்றப்படும் மொத்த கழிவுநீரின் அளவானது இடைப்பட்ட காலத்தில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 1991-ல் 12 ஆயிரம் மில்லியன் லிட்டராக இருந்த கழிவுநீரின் அளவானது 2008-லில் 24 ஆயிரம் மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian Furnitures




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed