சமையல் / குழம்பு வகை |
|
வெங்காயக் குழம்பு
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையானப் பொருட்கள் :
எண்ணை - 4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 15 இலைகள்
-------------
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
புளிக் கரைசல் - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தே.அ
தேங்காய் பால் - 1/2 கப்
(ரெடிமேட் கொகொனட் மில்க் பவுடர் 3 ஸ்பூன் 1/2 கப் தண்ணீரில் கரைத்து தேங்காய்ப் பாலுக்கு பதில் ஊற்றினாலும் சுவை தான்.)
செய்முறை :
இதற்கு கொஞ்சம் அதிகமாக எண்ணை எடுத்தால் சுவையாக இருக்கும்..4 அல்லது 5 ஸ்பூன் எண்ணை இருந்தால் நல்லது.
எண்ணையை காயவைத்து வரிசையாக கொடுத்துள்ளவற்றை கொண்டு தாளிக்கவும்.
பின் வெங்காயத்தையும்,பூண்டையும் சேர்த்து நன்கு பிரவுன் நிறத்துக்கு வரும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு உடைந்து வெங்காயத்துடன் கலந்து மை போல ஆகும் வரை வதக்கி மஞ்சள்,மிளகாய்,மல்லித் தூள்களை சேர்த்து மேலும் வதக்கி புளிக் கரைசல் சேர்த்து உப்பும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.