சமையல் / இனிப்பு வகை |
|
பூந்தி லட்டு (Laddu)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்
எண்ணை – பூந்தி செய்ய
சக்கரை – 2 கப்
நெய் – 3 தே. கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி, பாதாம் – சிறியதாக நறுக்கியது சிறிதளவு
காய்ந்த திராட்சை – சிறிதளவு
கச கசா – சிறிதளவு
மஞ்சள் நிறமி – சிறிதளவு (ஃபுட் கலர்)
ஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி/slotted spoon
செய்முறை:
கடலைமாவு, ஃபுட் கலருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றவும்.
எண்ணை நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணை மேலாக பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளை பொரித்தெடுக்கவும்.
அதே சமயம் மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)
நெய்யில் கச கசா, முந்திரி, பாதாம், திராட்சை பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.
பாகு, பூந்தி இரண்டையும் சூடாக இருக்கும்போதே ஒன்றாக கலக்கவும்.
கையில் சிறிது நெய் பூசிக்கொண்டு கைப்பொருக்கும் சூட்டில் உருண்டைக்ளாக பிடித்து வைக்கவும். ஆறியதும் பரிமாறவும்.