RSS Feed  

காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்


New organic medicine discovered to control diabetes
அடியக்கமங்கலம், 10.04.2014: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலையில் இயற்கையாக இன்சுலின் உள்ளதால் இனிமேல் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர 2 ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் (தமிழில் சிறுகுறிஞ்சான்) என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை, தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசி மட்டுமே உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைப்பதாக தெரிவித்துள்ளனர். பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின்விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் பெறுவார்கள்.

Hyderabad Collectibles




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed