RSS Feed  

அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்


Health benefits of prawns food
அடியக்கமங்கலம், 01.11.2014: அசைவ உணவுகளை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன, அதுவும் இறால் முக்கியமான ஒன்று. இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது, இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. இவை சரும சுருக்கத்தை தடுத்து, முதுமையான தோற்றத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

Bangalore Household




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed