RSS Feed  

கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்


Health benefits of coriander leaf
அடியக்கமங்கலம், 10.11.2014: நமது அன்றாட சமையலில் உணவை அலங்கரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல்நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் என்றே கூறலாம்.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் நோய், விழி வெண்படல அழற்சி(conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன.

சருமத்தில் படைநோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவினால், சரும பிரச்சனைகள் குணமாகும். கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைச்சுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.

கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கும். கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்கின்றது.

Pune Events




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed