RSS Feed  

3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்


Cancer formed 3200 years ago
அடியக்கமங்கலம், 18.03.2014: தற்போதைய சுடான் பகுதியில் 3200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இளைஞனின் எலும்புக் கூட்டில் புற்றுநோய்க்கான சான்றுகளை கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் மிக பழமையான புற்றுநோய் பாதிப்பு என்று இதுவரை நம்பப்படும் சம்பவத்தை விட இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்த எலும்புகளில் துளைகள் இருந்தன, அவை ஒரு வகையான புற்றுநோய்க்கான சான்று என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிலொஸ் ஒன் என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு புற்றுநோய் என்பது முற்றிலும் ஒரு நவீன கால நோய் அல்ல என்று தெரிய வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக எவ்வாறு இந்த நோய் பரிணமித்திருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்காணிக்கவும் இந்த ஆய்வு உதவும்.

Coimbatore Jobs




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed