RSS Feed  

புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி


Alternative ways to stop global warming
அடியக்கமங்கலம், 14.04.2014: உலக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி தற்போது வெளிவந்துள்ள ஐநா அறிக்கையில் அதிகமாக கரிமத்தை சுற்றாடலில் வெளியிடக்கூடிய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உலகம் வேகமாக விலகக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை வசதிகளில் மாற்றம் செய்யாமலேயே பேரழிவைத் தரக்கூடிய புவி வெப்பமாதலை தவிர்க்க முடியும் என்று காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்தலை அதிகளவில் குறைப்பது தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றே என்று புதிய ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது. தூய்மையான மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியும் மற்றும் எரிபொருள் வீணாதலை குறைக்கவும் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்யவேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. இதனால் சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமே தவிர பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.

American Household




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed